நண்பனின் உதவியால் கவிஞர் வாலியின் ‘வாலிப வாலி’ புத்தகம் படித்தேன்.
தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்க அவர் பட்ட பாடு…. வேதனை
அந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில வரிகள்:
” ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூட
தேக்கு விற்ப்பான் “
 
“வடியாத வெள்ளம் இல்லை. விடியாத இரவு இல்லை”
“என்றாவது ஒரு நாள் உங்கள் வியர்வை,
உங்கள் உயர்வை
உங்களிடன் கொண்டு வந்து சேர்க்கும்”
 
“உழை, உழை, உழை
உழைப்பைக் கொண்டு
பிழை, பிழை, பிழை
உழைக்காமல் பிழைப்பது
பிழை, பிழை, பிழை”
 
“நிறைய கோயில்கள் கொண்ட
ஊராமே
குடந்தை-
அப்படியானால் இந்த அக்கிரமத்திற்கு
அத்துணை தெய்வங்களுமா உடந்தை?”
 
“சுசிலாவே – நீ
விளைந்த இடம் விஜயவாடா.
கடவுள் கலந்து வைத்தான்
நீ விளையும்போதே
குரல் வளையில் விஸ்கி, சோடா”
 
“விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன் – அந்த
விலங்கு இனம் தன்னாலே வீழ்ச்சியுற்றான் – சிறு
குரங்கு என அதன் வாலில் தீ வைத்தானே – அது
கொளுத்தியதோ அவனாண்ட தீவைத்தானே”
 
“வட கலையா, தென் கலையா
வாதியும், பிரதிவாதியும்
வாய்தா மேல் வாய்தா வாங்க
நெற்றியிலே நாமமே இல்லாமல்
நின்று கொண்டிருந்தது யானை !
திடீரென்று ஒரு நாள்
சங்கிலியை அறுத்துக் கொண்டே ஊரைவிட்டே
ஓடிப்போயிற்று
எல்லோரும் பேசிக்கொண்டார்கள்
யானைக்கு மதம் பிடித்ததென்று
யாருக்குத் தெரியும்…
யானை மதம் பிடிக்காமல் தான்
ஓடிப் போயிற்று என்று”
“நான் அவனைத் தொடும் வரை
தரித்திரம் என்னைத் தொட்டது
அவன் என்னைத் தொட்டதும்
சரித்திரம் என்னைத் தொட்டது” – எம். எஸ். வீ பற்றி
 
“பெண், ஆண் இருவர் பிசைந்த மண்ணில்
எண் சாண் உயரமாய் எழுப்பிய வீடு”
 
“நூலாயிரம் கற்றவனும்,
அதற்கு மேலாயிரம் கற்றவனும்
நாலாயிரம் கற்றவன் போல் ஆவானோ