சுஜாதா என்ற , அளவோடு கொண்டாடப்பட்ட , எழுத்தாளரின் அறிவு விஸ்தாரணத்தைக் காட்டும் பல கட்டுரைகள் கொண்ட ஒரு அபாரமான புத்தகம்.

கேள்விகள் நிறையக் கேட்கும் இக்கால இளைய தலை முறைக்கு இங்கு உள்ள பல பதில்கள் /விளக்கங்கள் திருப்தி அளிக்கும் என்றே தோன்றுகிறது.

என் தலைமுறையில் பெரியவர்கள் எது சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திலுருந்து, இந்தத் தலைமுறையினர் எதையும் தெளிவாக்கிக் கொண்டுதான் நம்பவோ பின்பற்றவோ தொடங்குவதற்கு பல பதில்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளது.

நான் படித்து என்னைக் கவர்ந்த, ஈர்த்த சில குறிப்புகளை இங்கே, என் வலைப்பக்கத்தில், பதித்துள்ளேன். படித்து நம்புபவர்கள் நம்பலாம், பின் பற்றுபவர்கள் பின் பற்றலாம்,  மற்றவர்கள் நகரலாம் :

 
  1. மஞ்சள் ஒரு தலை சிறந்த கிருமி நாசினி
  2. வெளியிலே இருந்து வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது – அதுவும் கண்டிப்பாக பிரிட்ஜ் தண்ணி. வீட்டுக்குள்ள நுழைந்து வீட்டு சூழ்நிலைக்கு உடம்பு பக்குவப் பட்ட பிறகுதான் குடிக்கணும்
  3. இப்பல்லாம் கர்பத்துல இருக்கிற குழந்தை வளர்ச்சி பற்றி ஸ்கேன் பண்ணி தெரிஞ்சுக்கறாங்க. ஆனால் இதெல்லாம் ‘மார்கண்டேய புராணம் ‘ என்னும் நூல்ல விரிவா இருக்கு
 
    • வயத்துல இருக்கிற 5 நாள் குழந்தை, வட்டமா – நுரை வடிவத்துல இருக்கும்
    • 10 நாட்கள்ல எலந்தப் பழம் மாதிரி கட்டியான உருவத்துல இருக்கும்
    • 2வது மாசத்துல கை – கால் எல்லாம் உண்டாகும்
    • 3வது மாசத்துல நகம், முடி, எலும்பு , தோல், ஆணா, பெண்ணான்கற அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை இதெல்லாம் உண்டாகும்
    • 4வது மாசத்துல – தோல் , ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் அப்படிங்கற ஏழு தாதுக்கள் உண்டாகும்
    • 5வது மாசத்துல பசி, தாகம் உண்டாகும்
    • 6-வது மாசத்துல கர்ப்பப் பையால் சுற்றப் பட்டு, அம்மாவோட வயித்துல வலப் பக்கமா ரௌண்டு அடிக்கும்
    • 7-வது மாசத்துல அந்த ஜீவனுக்கு ஞானம் கிடைக்கறது. போன ஜன்மங்களுடைய நினைவு, இப்ப பிறக்க வேண்டிய காரணம், தொடர்பு எல்லாம் புரிகிறது . அம்மா சாபிடுற உப்பு, உறைப்பு, தித்திப்பு எல்லாம் அந்த குழந்தையை பாதிக்கிறது. ஏழாவது மாசத்துல அறிவு உண்டாகி, ரெண்டு கையும் கூப்பின மாதிரி வெச்சு ‘எப்படா வெளியிலே வருவேன்’னு சாமி கிட்ட பிரார்த்தனை பண்ணும்.
    • 10 மாசம் ஆனதும் குழந்தை வெளிப்பட காரணமா இருக்கிற காற்று, குழந்தையை தலைகீழா வெளியில தள்ளிடும்.
  • ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கெல்லாம் இதைச் சொன்னவர் டாக்டர் இல்லை,  விஞ்ஞாநி இல்லை,,, சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். வேதங்களை தன சுவாசமாககே கொண்டு வாழ்ந்தவர். அன்றே ‘மார்க்கண்டேய புராணத்திலும், பாகவத புராணத்திலும், இதைச் சொன்ன அவர் பெயர்   – வியாச பகவான்