சைபர் ஆபத்துக்களைத் தவிர்க்க , எதிர்கொண்டு வெற்றி கொள்ள ஓர் அழைப்பு

சாதாரண மக்கள் தினந்தோறும் வளர்ந்து, மிரட்டி வரும் சைபர் குற்றங்களை எதிர் கொள்ள ஒரே வழி இவர்களின் அறியாமையையும் ஆபத்துக்களையும் விரட்டுவது தான். முக்கியமாக முதியவர்கள், பெண்டிர் மற்றும் சைபர் விஷயங்களில் உதவி தேடுபவர்களுக்கு நீட்டப்படும் கரங்கள் தான் இவை.

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் சைபர் பாதைகள் தவிர்க்க முடியாத ஓரு வழி. இந்தப் பாதைகளைத் தவிர்த்தோ இல்லை தெரியாமலும் புரியாமலும் பயணம் செய்வது ஆபத்தை விளைவிக்கும் .

சைபர் உலகத்தின் பால பாடங்களைச் சொல்லிக் கொடுத்து, தான் ஒரு சைபர் அநாதை இல்லை என்ற நம்பிக்கையை அளிக்கும் ஓர் சிறிய முயற்ச்சி இது .

யார் வேண்டுமானாலும் இலவசமாக வீட்டில் இருந்து கொண்டே இதைக் கற்று தெரிந்து கொண்டால் இப்படிபட்ட சைபர் எளியவர்கள் முதிர்ந்து, சைபர் உலகத்தில் தைரியமாக வலம் வர  முடியும்.

ஆகையால், தேவைப் படுபவர்கள் +91 9840258014 என்ற எண்ணுக்கு ஒரு வாட்சப் செய்தி அனுப்பி விபரங்கள் தெரிந்து கொண்டு பயிற்சி மேற்க் கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

கபாலீஸ்வரன்

16-Oct-2024

Photo Gallery